என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிவாரணப் பொருட்கள்"
- மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது.
- முதல் தொகுப்பில் அத்தியாவசிய மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் படைக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களின் வசிப்பிடமான காசா பகுதியில் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக மக்கள் போதிய உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது. 30 டன் மருந்துகள், உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
பாலஸ்தீனத்துக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள முதல் தொகுப்பில் அத்தியாவசிய மருந்துகள், அறுவைச் சிகிச்சைக்கான மருந்து மற்றும் உபகரணங்கள், பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட பொருட்கள், பொது மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் பொருள்கள், கலோரி அதிகம் நிறைந்த பிஸ்கட்டுகள் ஆகியவை அடங்கும்.
இந்த தகவலை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
- காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
- போரினால் காசாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.
கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கல் நடத்தியது. இதில் வடக்கு காசா முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதேபோல் கடைசி நகராக, ரபா நகரை இஸ்ரேல் படை குறிவைத்துள்ளது. ரபா நகரில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே போரினால் காசாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு சரியான அளவில் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் கிடைக்காததால் பசி பட்டினியால் வாடுகின்றனர். மக்களுக்கு ஐ.நா. அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இங்கும் கடும் நெரிசல் காணப்படுகிறது.
இந்நிலையில், வடக்கு காசா நகரில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் இன்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கஜா புயலால் தமிழகத்தில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மாவட்டத்தில் காரைக்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர் உள்பட பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்படைந்தன. இந்த பகுதிகளில் புயலால் சாய்ந்த மரங்கள், மின்கம்பங்கள் போன்றவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் உள்ளிட் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமமடைந்து வருகின்றனர்.
இதையடுத்து பல்வேறு அமைப்புகள் நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்தநிலையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தேவகோட்டையில் இருந்து 3 லாரிகள், மினி வேன்களில் அனுப்ப ஏற்பாடுகள் செய்திருந்தார்.
நிவாரணப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் ஆலங்குடி, திருமயம் உள்பட மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த வாகனங்களை அமைச்சர் பாஸ்கரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் அரிசி, பிஸ்கட், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சீனி, ரவை ஆகிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இவற்றை தொகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் தளக்காவயல் பிர்லா கணேசன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் தசரதன், அரசு வழக்கறிஞர் ராமநாதன், ஆவின் சேர்மன் அசோகன், கே,பி,ராஜேந்திரன், தேவகோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சுந்தரலிங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் போஸ், ரமேஷ், சுப்பிரமணியன், கண்டதேவி ஆறுமுகம், முத்துராமலிங்கம், துரைராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.
கஜா புயலால் நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருள்களை அனுப்பி வருகின்றனர்.
இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ சார்பில் துணிகள், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, பிஸ்கட், ரஸ்க், தண்ணீர் பாட்டில்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு இருந்து லாரி மூலம் நிவாரணப் பொருள்களுடன் சென்றது. இங்கிருந்து செல்லும் நிவாரண பொருள்கள் தஞ்சாவூர், பேராவூரணி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுவுள்ளதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ஜெமினி, சிறுபான்மையோர் பிரிவு திவான்பாட்ஷா, நிர்வாகிகள் போடுசாமி, பாலமுருகன், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Minister #KadamburRaju
கேரள மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அனைத்து பகுதிகளில் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வசதியாக பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், கொடையாளர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், போர்வை, ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் தலைமையில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட வழங்கல் அதிகாரி ராம்பிரதீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்துள்ளார். #keralafloods
திருப்பூர்:
திருப்பூர், பல்லடம் சாலையில் அமைந்துள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தலைமையில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அனுப்பி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது,
திருப்பூர் மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான 1435 கிலோ அரிசி, 60 பெட்டி தண்ணீர் பாட்டில்கள், 50 கிலோ துவரம்பருப்பு, உயிர்காக்கும் மருந்துகள் ,பால் பவுடர், பற்பசை, போர்வைகள், சானிட்டரி நாப்கின்கள், பிஸ்கட்டுகள் மற்றும் பாக்குமட்டையிலான தட்டுக்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் போர்கால அடிப்படையில் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும், காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் மூலமாக டீ-சர்ட்டுகள் மற்றும் ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கோவை மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்தில் உள்ள கால்நடைகளுக்கு முதற்தட்டமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான தடுப்பூசிகள், தீவனம் மற்றும் சத்து மருந்துகள் அனுப்பிவைக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத் திலுள்ள பொதுமக்கள் அதிகளவில் கேரளா மாநிலத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கு வதற்கு முன்வந்து பல்லடம் சாலையில் அமைந்துள்ள ராமசாமி முத்தம் மாள் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தில் வழங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தின் மூலமாக ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதன் ஒரு பகுதியாக ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் போது சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), மாநகர காவல் துணை ஆணையர் உமா, மாவட்ட வருவாய் அலுவலர்பிரசன்னா ராமசாமி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் சப்- கலெக்டர் ஷ்வரன் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜன், உடுமலைபேட்டை வருவாய் கோட்டாட்சியர் அசோகன் மற்றும் துணை கலெக்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். #keralarain
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்